ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மோகினி டேவின் விவகாரத்து சர்ச்சைக்கு முற்றுபுள்ளி… மோகினி வெளியிட்ட பதிவு…

இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை வாங்கி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.தற்போது சில தினங்களாகவே இவருக்கும் இவரின் மனைவி சாய்ராவிற்கும் உள்ள விவகாரத்து பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசபட்டு வருகிறது. 29 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்த இவர்களின் விவகாரத்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1ஆண் மகனும் உள்ளார். இவர்களின் மூத்த பெண்ணான கதீஜாக்கு திருமணம் ஆன நிலையில் இவர்கள் ஏன் விவகாரத்து பெறுகிறார்கள் என அனைவரும் பேசும் அளவிற்கு தான் இருந்தது. இந்நிலையில் இவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டேவும் விவாகரத்து செய்வதால் இவர்களை வைத்து சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோகினி டே அவர்கள் தற்பொழுது ஒரு பதிவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் தற்போது ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். ஆனால் எதற்கு இப்படி ஆர்வமாக இருக்கிறார்கள் என எனக்கு தெரியும். நான் அவர்களிடம் பேட்டி கொடுக்க நான் தயாராக இல்லை என கூறிவிட்டேன். கிளம்பும் வதந்திகளுக்கு என்னால் பதிலளித்து என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை எனவும் மேலும் எங்கள் தனியுரிமை மற்றும் சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

You may have missed