சூது கவ்வும்-2வில் நடிக்கும் மிர்ச்சி சிவா…சிவாவின் நியூ ஸ்டைலில் வெளிவந்த டீசர்…

விஜய் சேதுபதியின் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் தான் சூது கவ்வும். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி,ரமேஷ் திலக்,அஷோக் செல்வன்,பாபி சிம்ஹா,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் நடித்து மக்களிடம் இருந்து ஒரு கலவையான வரவேற்பை பெற்றிருந்தனர். இப்படம் விஜய் சேது பத்தி அவர்களின் கேரியரில் ஒரு முக்கிய திருப்பமாக படமாக இருந்தது.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.இதில் ஹீரோவாக கலகலப்பு படத்தில் வந்து கலக்கிய மிர்ச்சி சிவா தான் நடிக்கிறார்.இப்படத்தை சி. வி குமார் தயாரிக்க கே ஆர்ஜூன் அவர்கள் இயக்கியுள்ளார்.இதில் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு சிறப்பு பகுதியில் வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதன் டீசர் வெளியான நிலையில் படம் டிசம்பர் 13ல் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.மேலும் இதில் ரமேஷ்,திலக் கருணாகரன்,கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் மிர்ச்சி சிவா தனது புது ஸ்டைலை காண்பித்துள்ளார்.இது அதே அளவு வெற்றி பெறுமா என ரசிகர்களிடையே கேள்வி எழும்பியுள்ளது.

You may have missed