கண்கலங்க வச்சிட்டாங்க… சொந்த ஊர் நினைவுகளை திரும்ப கொண்டு வந்த கார்த்தியின் மெய்யழகன்…..

0

2018 ல் வெளியாகி வெற்றி கொடுத்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரின் மெய்யழகன் படம் இன்று ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்களிடம் பேட்டி எடுத்ததை கீழை பார்க்கலாம்.


படம் மிகவும் அருமையாக உள்ள நிலையில் சில கட்டத்தில் அழுகை வர வைத்தது. பேட்டியில் ஒரு பெண்மணி கூறியது , சொந்த ஊரை விட்டுவிட்டு வேலையின் காரணமாக சென்னையில் வந்து தங்கிருக்கும் என்னை போன்றவர்களுக்கு இப்படம் ஊர் நினைவுகளை திரும்ப கொண்டு வந்துவிடும். படம் பார்க்கும் 3 மணி நேரமும் சொந்த ஊரில் இருந்த நினைவுகளை மட்டுமே கொடுக்கும்.


மேலும் சிலர் கார்த்தி அரவிந்தசாமியின் கூட்டணி மிகவும் நன்றாக உள்ளது என கூறி இருக்கிறார்கள். படம் நீளமாக உள்ள நிலையிலும் எந்த இடத்திலும் சோர்வை தரவில்லை எனவும் முந்தைய கால உறவுமுறைகளின் பழக்கவழக்கங்களையும் இயக்குனர் அருமையாக எடுத்துகாட்டியுள்ளார் என ஒருவர் கூறியுள்ளார் . படத்தில் பல இடங்களில் எமோஷ்னல் காட்சிகள் உள்ளது. இக்கால இளைஞர்களுக்கு உறவின் மகிமை தெரியவில்லை, சொந்த ஊரின் அருமை மற்றும் வரவேற்பை எடுத்து காட்டியுள்ளார்.


படம் அதிரிபுதிரியாக இல்லை எனினும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. படம் இறுதி முடிவில் மனதை மிகவும் பரமாக்கிறது. கார்த்தியின் தொடர் பேச்சு கொஞ்சம் சலிப்பை தருவதால் அதை ரீ-எடிட் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ஒரு பெண் கூறியுள்ளார்.
மெய்யழகன் படம் இளம்வயது நினைவுகளை திரும்ப கொண்டு வரும் ஒரு பெஸ்ட் மூவீ ஆக உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *