ஹிந்தி விழாவில் தமிழில் பேசக்கூடாதா…?? சிரிச்சிட்டே பதிலடி கொடுத்த மீனா…..

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தென்னிந்திய நடிகைகளில் முக்கிய பங்கு வகித்தவர்தான் கண்ணழகி மீனா.
இவர் 80s 90s காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனெக்கென்று தனி இடம் மக்கள் மனதில் இன்றும் பிடித்து வைத்துள்ளார்.

இவர் தற்பொழுது ஒரு ஹிந்தி விழாவில் பங்கேற்ற பொழுது அங்கு தமிழில் பேசினார்.
அதற்கு தொகுப்பாளர், ஒருவர் இது ஹிந்தி விழா எனவும் இங்கு ஹிந்தியில் பேசுமாறு கூறியுள்ளார்

.
அதற்கு மீனா அவர்கள் இது ஹிந்தி விழாவா அப்புறம் எதற்கு என்னை அழைத்தீர்கள். என சிரிச்சிட்டே கூறி நான் தென் இந்தியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
எனவும் கூறி அசத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீனா அவர்களை பாராட்டி வருகின்றனர்.