கூல் சுரேஷின் மஞ்சள் வீரன் படத்தின் முதல் போஸ்டர் ரிலீஸ்…

90s காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் கூல் சுரேஷ்.இவர் பின் சந்தானத்துடன் இணைந்து காமடி நடிகராக வலம் வந்தார்.இதைத்தொடர்ந்து இவர் திரைப்படங்களுக்கு வந்து பார்த்து படங்களை விமர்சனங்கள் செய்து வந்தார்.

பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது.இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.இயக்குனர் செல் அம் இயக்கத்தில் TTF வாசன் நடிக்க போவதாக ஒரு தகவல் வந்து பின் TTF வாசனை வேண்டாம் என்றும் சொல்லப்பட்ட படம் தான் மஞ்சள்வீரன்.

இதைத்தொடர்ந்து இதில் கூல் சுரேவ்ஸ் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டனர்.இப்படத்திற்கு பூஜை போட்டு தொடங்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.இதைத்தொடர்ந்து தற்போது இவரின் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் வெளி வந்துள்ளது.இதை இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.