தேசிய விருது பெற்ற டைரக்டர் மணிரத்தினம்…. பொன்னியின் செல்வனால் கிடைத்த பெருமை…

தமிழ் சினிமாவி ல் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் தான் மணிரத்தினம் அவர்கள். இவர் படம் என்றாலே மிகவும் பிரமாண்டமாக அசைத்தும் கதைக்களமாக தான் இருக்கும். பொன்னியின் செல்வன் என்பது நம் வரலாற்று கதைகளில் ஒன்று.

இதை படமாக எடுத்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது மணிரத்தினம் அவர்களின் நெடுநாள் ஆசையாக இருந்திருக்கிறது. அதை கரெக்ட் ஆன சந்தர்ப்பம் வரும்போது பயன்படுத்திகொண்டு படத்தை எடுத்து அசத்தி மாபெரும் வெற்றி கண்டார். தற்போது இவர் இயக்கத்தில் கமல்காசன் நடிப்பில் தக் லைஃப் படபிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக தேசிய விருது பெருமாறு மணிரத்தினம் அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது இதனை தொடர்ந்து இவர் அவரது மனைவி சுகாசினி உடன் சென்று நேற்று குடியரசு தலைவர் கையால் விருதை பெற்றுள்ளார்.

இப்புகைப்படத்தை மிகுந்த சந்தோஷத்துடன் சுகாசினி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.