சிம்புவின் மாநாடு படத்தின் 3ஆம் ஆண்டு வெற்றி… வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

சிலம்பரசன் சிம்பு நடிப்பில் 2021ல் வெளிவந்த படம் தான் மாநாடு. கோரோனோவிற்கு பின் திரையரங்களில் கூட்டங்களை கூட வைத்த படம் தான் இது. இப்படத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அவர்கள் சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடையே இன்றளவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது . மேலும் படத்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்த சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு, மேஸ்ட்ரோ மாஸ்டர் யுவன், எடிட்டர் பிரவீண் கே எல், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் போன்றோருக்கு என் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.

மேலும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், கல்யாணி பிரியதர்ஷன் உட்பட அனைத்து நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள், தயாரிப்பு உதவி செய்த நண்பர் உமேஷ் குமார், அலுவலகத்தில் பணியாற்றிய நண்பர்கள், உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிம்புவின் பேரன்பு ரசிகர்கள் ரசிகைகள் அனைவருக்கும் நன்றிமற்றும் என் பேரன்பை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

You may have missed