சீனாவில் மட்டுமில்லாமல் ஜப்பானிலும் வெளியாகும் விஜய்சேதுபதியின் மகாராஜா…
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த படம் தான் மகாராஜா. இப்படம் முழுக்க முழுக்க அப்பா மகளின் பாசத்தை குறிப்பிடுமாறு உள்ள ஒரு கதை ஆகும். இப்படம் விஜய் சேதுபதி அவர்களின் 50வது படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி அவர்களுடன் பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் போன்றோர்கள் நடித்திருந்தார்கள்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை குறிக்கும் விதத்தில் இப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 140 கோடி மேல் திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வசூல் செய்ததிருந்தது. 2024ல் இது ஒரு ப்ளாக் பாஸ்டர் படமாக இருந்தது. இப்படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
இந்நிலையில் இப்படம் சீன மொழியில் மொழி பெயர்க்கப்படுவதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இப்படம் மொழி பெயர்க்கப்பட்டு மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றியை தொடர்ந்து இப்படம் ஜப்பானிலும் பொழிபெயர்க்கப்பட்டு வருகிறது எனவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.