1000 கோடி வசூலா..!! சீன மொழியில் டப்பிங் செய்யப்படும் மகாராஜா… விஜய் சேதுபதியின் கனவு நிறைவேறுமா..??

தற்போது விஜய் சேது பதியின் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்ட படம் தான் மகாராஜா. இப்படம் ஒரு தந்தை மற்றும் மக்களுக்கான பாசக் கதையை குறிக்கும் விதமாக உள்ள படம். தமிழ் சினிமாவில் 2024-ல் உள்ள டாப் 10 படங்களில் கட்டாயம் இப்படமும் இடம்பெறும்.தமிழில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் தற்போது சீன மொழியில் டப் செய்யப்படபோகிறது.

இந்திய சினிமாவில் இருந்து இதுவரை சில படங்கள் மட்டுமே சீனா போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் 1000 கோடி மேல் சில படங்கள் மட்டுமே வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் வருமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தங்கல், பாகுபலி, RRR,கேஜிஎப், கல்கி, ஜவான், பதான் போன்ற படங்கள் மட்டுமே இதுவரை 1000 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்துள்ளது.

தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பி.கே மற்றும் அந்தாதுன் போன்ற படங்கள் மட்டுமே சீனாவில் 1000 கோடி வசூலை பிடித்த இந்திய படங்கள் ஆகும்.இந்த வகையில் சீன மொழியில் டப் செய்யப்படும் விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் 1000 கோடி மேல் வசூல் செய்யுமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
