தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் திரையுலகினரும் கொண்டாடி வரும் சாதி ஒழிப்பு படம் “லப்பர் பந்து”

தற்பொழுது இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள லப்பர் பந்து திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் சினிமா திரையுலகிரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இரு ஆண்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை தான் முக்கிய கருத்து என்றாலும் பெண்களுக்கும் ஒரு உலகம் உண்டு அவர்களுக்கும் உணர்வு உண்டு என்று பெண்களின் நிலையை வைத்தும் இயக்கியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து.

அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு சாதியினரும் புண்படும் விதமாக இல்லாமலும் இந்த படத்தை இயக்கியுள்ளார். சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு பற்றிய கருத்துக்களையும் படம் பார்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்க்கு இயக்குனர் படத்தில் காட்சிகளை வைத்துள்ளார்.
மேலும் காதல், கணவன் மனைவி உறவு பற்றியும் மாமியார் மருமகள் உறவு பற்றியும் கிராமத்து விளையாட்டு பற்றியும் ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு அருமையான படைப்பினை இந்த படத்தின் காட்சியில் அமைத்துள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து. அவரை தமிழ் சினிமா திரையுலகின் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேப்டன் மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய ரசிகர்கள் மீண்டும் திரையில் அவரை பார்ப்பதற்கான ஒரு காட்சியாக அவரையும் இந்த படத்தின் காட்சிகளில் காட்டியுள்ளார். அவருடைய பாடலான “அட நீ சிங்க குட்டி” என்ற பாடலையும் தெறிக்கவிட்டுள்ளார். மேலும் படத்தில் கங்குலி, csk, விஜயகாந்த் அவர்களின் ஓவியங்களையும் வரைந்து மெற்கேற்றி உள்ளார் கலை இயக்குனர்.

கிளைமாக்ஸ் சீன் அற்புதமாக காட்சி படுத்தியுள்ளார். எந்த ஒரு சமூகத்தினரும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்து கொள்ளாமல் அன்பாக இருப்பதின் நோக்கத்தையும் ரசிகர்களுக்கு விளங்கும் விதமாக கட்சிதமாக காட்டியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து.
திரையரங்கில் வெற்றி நடை போட்டு வரும் இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் வெற்றிமாறன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்