லப்பர் பந்து ஹீரோவாக நடிக்க தவறிய பிரபல நடிகர்.. யார் அந்த நடிகர் தெரியுமா..?

சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்த படம் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மைய படுத்தி எடுக்கப்பட்ட படம்.

அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அட்டகத்தி தினேஷ் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரையுலகினரும் லப்பர் பந்து திரைப்பட குழுவினரை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.மேலும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள கெத்து ரோல்க்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த லப்பர் பந்து படத்தில் கெத்து ரோலில் ஹீரோவாக நடிக்க பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யாவை தான் முதலில் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து அணுகுனாராம். ஆனால், எஸ் ஜே சூர்யாவின் பல காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாததால் அதன் பின்னர் இயக்குனர் கெத்து ரோலில் அட்டகத்தி தினேஷை நடிக்கவைத்துள்ளார்.
