லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தெலுங்கு நடிகை… யார் அவர்..??

சரவணா ஸ்டோரின் ஓனரான சரவணன் அருள் என்பவர் தான் இன்று லெஜண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலமாக லெஜெண்ட் சரவணன் என மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் ஜெர்ரி, ஊர்வாசி, நாசர், விவேக் போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை தயாரித்ததும் இவரே. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி , கன்னடம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்டு பான் இந்தியன் படமாக வெளிவந்தது.ஜேடி – ஜெர்ரி என்பவர் இப்படத்தை இயக்கிருந்தார்.இதை தொடர்ந்து இவர் இரண்டாவது படத்தில் நடிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டு வருகிறார்.

இப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா போன்றோர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பாயல் ராஜ்புட் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றவாறு ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள புகைப்படங்களில் பாயல் ராஜ்புட்டும் யிருக்கிறார். இவர் பஞ்சாபி மொழிகளில் அதிகள் படம் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது தமிழிலும் படம் நடிக்கிறார்.

You may have missed