நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு லப்பர் பந்து படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் பார்க்கிங். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இணையாக ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திருப்பர்.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர் ஹீரோயினாக சஞ்சனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வசூல் ரீதியாக இன்று வரை 23 கோடி வசூல் செய்துள்ளதாக தகவவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூபாய் 70 லட்சம் சம்பளம் வாங்கிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.