மணிமேகலை, பிரியங்கா மோதலுக்கு பிறகு பிரியங்கா போட்ட போஸ்ட்… என் கனவையும் ஒளியையும் நோக்கி பயணிக்கிறேன்….!

விஜய் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி” இதில் இரண்டு பிரபல தொகுப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரபல தொகுப்பாளர்களான மணிமேகலை பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டது.விஐய் டெலிவிஷன் பிரபலங்கள் பலபேர் பிரியென்காகு ஆதரவாகவும் சிலபேர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் தன்னுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

மணிமேகலை இதனை பற்றி தன்னுடைய யூடுப் பக்கத்தில் கூறுகையில் சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதையை கிடக்குது என்று நக்கலாக பிரியங்கா ஆதரவாளர்கள் மீது சாடியுள்ளார்.மேலும் மணிமேகலை தன்னுடைய ஆதரவாளர்கள் ரசிகர்களுக்கு கூறுகையில் பிரியங்காக்கும் எனக்கும் நடந்த மோதலை பற்றி மட்டும் பேசினால் போதும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் ஏதும் கூற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இப்படி இருவருக்கும் இடையில் உள்ள மோதல் அதிகரித்து வந்த நிலையில் மணிமேகலையிடம் ஏற்பட்ட மோதல்க்கு பிறகு பிரியங்கா முதல் பதிவாக தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது அவருடைய வாழ்வின் காயங்கள் அனைத்தும் மறைந்து விட்டதாகவும். என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் என்னுடைய ஒரு துளி கண்ணீரும் உதவியது. எனவும் நான் எழுதுவது எனக்காக மட்டும் இல்லை என்னுடைய கனவையும் ஒளியையும் நோக்கி செல்கிறேன் எனவும் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.