சின்ன வயசுல இளைய தளபதியோட நடிச்ச சிறுமியா இது..? தற்போது மின்னும் அழகில் ஜொலிக்கும் சின்ன திரை பிரபலம்..!

குழந்தைகளாக அறிமுகம் ஆகும் படங்களில் சிறு காட்சிகளில் வந்தாலும், தங்களது க்யூட்டான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் சிறுவர், சிறுமியர்.வளர்ந்த பின்னர் இவங்க தான் அந்த படத்தில் நடித்த பிரபலமா என்று வியப்பில் ஆச்சர்யப்படுவோம். குழந்தை நட்சத்திரங்களாக படங்களில் நடிப்பில் அசத்திய குழந்தைகள் பின் நாட்களில் வளர்ந்ததும் பெரிய திரையிலோ அல்லது சின்ன திரையிலோ கொடி கட்டி பறப்பார்கள். அவர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் முதல் இன்று லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடித்து வரும் STR வரை வளர்ந்த பின்னர் தங்களுக்கென தனி திறமையை வளர்த்து படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கி கொண்டார்கள்.

சின்ன திரை பிரபலங்களில் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சின்னத்திரையில் நடித்து தனெக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களா அறிமுகம் ஆன பல சிறுவர், சிறுமியர் பெரியவர்களாக வளர்ந்ததும் தங்களுக்கேற்ற துறையில் கவனம் செலுத்தி தங்களது திறமையின் மூலம் நடித்து அசத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக குருவி படத்தில் அறிமுகம் ஆன இந்த பிரபலம் தற்போது சின்ன திரை தொடர்களிலும், மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலும், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தனி முத்திரை பதித்துள்ளார்.

பரிச்சயமான பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றம் கொண்ட இந்த பிரபல சின்ன திரை நட்சத்திரம் நான் மகான் அல்ல, மாவீரன் கிட்டு, பாயும்புலி, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரை இன்ஸ்டாவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவர் வேறு வரும் அல்ல நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்த ஷாதிகா. தற்போது அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. நேவி ப்ளூ நிற புடவையில் மினு மினுக்கும் அழகில் ஷாதிகாவின் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்….
pic1

pic2

pic3

pic4
