டூத் பிரஷ் கூட தங்கத்தில் பயன்படுத்தும் இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி…

பொதுவாகவே நடிகை மற்றும் நடிகர்கள் கோடிக்கணக்கில் தான் சம்பளம் வாங்குவார்கள்.அதனாலே அவர்களின் அன்றாட வாழ்க்கை கோடா ஆடம்பரமாக தான் இருக்கும்.அவர்களை சுற்றி எப்பொழுதுமே கேமரா இருப்பதாலே அவர்கள் ஒவ்வொரு நாளும் புது புது துணி தான் அணிய வேண்டி இருக்கும்.

சொகுசாக வீடுகளில் இருக்கும் இவர்கள் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதெல்லாம் இயல்புதான்.இவர்களின் வாழ்க்கை நடைமுறையை சோசியல் மீடியாவில் வெளியிடுவதுதான் இவர்களின் வழக்கம்.அந்த வகையில் நடிகை நடிகை கியாரா அத்வானி தங்க பிரஸ் பயன்படுத்துவது போன்று ஒரு போஸ்டை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் போட்டுள்ளார்.

இவர் வேறு யாரும் இல்லை தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் சினிமாவினுள் நுழைந்தவர்.பின் இவர் தெலுங்கு ஹிந்தி என கலக்கி கொண்டுள்ளார்.சமீபமாக கூட இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவரின் பரத் என்னும் நான் படம் மிகவும் ஹிட் அடித்தது.இவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் எல்லாம் பணம் தான் காரணம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
