கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய காமெடி நடிகர் பிரம்மானந்தம்…

கில்லி படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் தெலுங்கு காமெடி நடிகர் பிரமானந்தம். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இவர் அதிகமாக படம் நடித்தது என்றால் அது சிரஞ்சீவி அவர்களுடன் தான். இவரின் மிமிக்கிரி திறமைகைக்காவே சிரஞ்சீவி அவர்கள் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்ததாக இவர் ஒரு பேட்டியில் கூறி இருப்பார். இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம் படத்தில் நடித்திருப்பார். அதனைத்தொடர்ந்து இவர் 1000 படங்கள் நடித்த ஒரே நடிகர் என கின்னஸ் ரெக்கார்ட் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மிக கஷ்டப்பட்டு தன் கடின உழைப்பால் முன்னேறி வந்தவர். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
