களவாணி படத்தில் KGF யாஷா..?? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் விமலின் அற்புதமான நடிப்பில் வெளியாகி ஒவ்வொரு நிமிடமும் நம்மை சிரித்து மகிழ செய்த படம் தான் களவாணி.இப்படத்தில் ஓவியா கதாநாயகியாகவும் விமல் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.மேலும் கஞ்சா கருப்பு, சூரி,சரண்யா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தை இயக்குனர் சற்குணம் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.களவாணி தனமான எண்ணம் உடைய கதாநாயகனுக்கு காதல் வருவதும் அவர்கள் சேர ஒரு கூட்டமே சேர்ந்து நடித்து ஏமாற்றுவதும் தான் இப்படத்தின் முக்கிய கதை.அதை ஒரு இடத்தில் கூட சலிக்காமல் ரசிகர்கள் பார்க்கும் படி இயக்குனர் எடுத்திருப்பார்.

இந்நிலையில் இப்படம் கன்னடத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.இதில் KGF படத்தில் கதாநாயகனாக வந்து உலகெங்கும் ரசிகர்களை வைத்திருக்கும் யாஷ் நடித்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

You may have missed