திடீரென இவர்தான் நான் கட்டிக்கப்போறவர் என்று அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ்… 15 ஆண்டுகள் relationship-ஆம்… வியப்பில் ரசிகர்கள்…

பைலட்ஸ் என்கிற படத்தின் மூலமாக குழந்தை நச்சத்திரமாக 2000-தில் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இதைத்தொடர்ந்து சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2015ல் விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர்.இதைத்தொடர்ந்து இவர் நடித்த ரஜினி முருகன் படம் மிகுந்த வெற்றியை கொடுத்தது.இப்படத்தின் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ரெமோ என்கிற படத்தில் இணைந்தார். பின்னர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் படத்திலும் நடித்து வெற்றியை கொடுத்தார். இதைத்தொடர்ந்து பல முக்கிய பிரபலங்களுடன் நடித்து மிக முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெறி படத்தை அட்லீ ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். அப்படத்திற்கு பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் நடிப்பதன் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் களமிறங்குகிறார்.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இவருக்கு கோவாவில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாக தாவல் வெளியாகியுள்ளது. மாப்பிளை இவருடன் 15 வருடங்களாக பழக்கத்தில் இருக்கும் ஆண்டனி தட்டில் என்பவராம். இருவருக்கும் கேரளா சொந்த ஊராக இருப்பினும் இருவருமே துபாயில் வசித்து வருகிறார்களாம். ஆனால் இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

You may have missed