ஏ.ஆர்.ரகுமானின் திடீர் விவகாரத்து குறித்து அவரது மகள் கதீஜா வெளியிட்ட ஆதங்க பதிவு…

திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் பாடலுக்கு மயங்காதவர்களி கிடையாது எனலாம்.1995ல் இவருக்கும் சாய்ரா என்பவருக்கும் திருமணம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன.இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்து அடுத்து இவர்களின் விவகாரத்து தான் இப்பொது மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.மூத்த மகளுக்கே திருமணம் ஆன நிலையில் இவர்கள் ஏன் இப்பொது திடீரென விவாகரத்து கேட்கிறார்கள் என்பது தான் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த விவகாரத்தை குறித்து சாய்ரா ஒரு அறிக்கை வெளியிட்டார்கள் அதற்கு பதிலாக ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நாங்கள் 29ஐ தாண்டி 30ஐ தொட விரும்பினோம் ஆனால் எதிர்பாராமல் முடிவுக்கு வந்துவிட்டது இந்த பந்தம் நொறுங்கிய இதயம் மீண்டும் சேராது என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.இதற்க்கு அவரது மகள் கதீஜா மனம் உடைந்து கை கூப்பி கும்பிடுவதுபோல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
