ரொமான்டிக் புயல் ஜெயம் ரவி மற்றும் நித்தியாமேனன் நடிக்கும் காதலிக்க நேரமில்லை… வெளியான பர்ஸ்ட் டீசர்…

ஜெயம் படத்தில் அறிமுகம் ஆகி முதல் படத்திலே பட்டிதொட்டியெல்லாம் பெயர் அவ்வங்கியவர் தான் நடிகர் ஜெயம் ரவி.கடைசியாக இவரின் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் தான் பிரதர்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருப்பார்.இப்படம் வசூல் ரீதியாக அந்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது இவரின் நடிப்பில் நித்தியாமேனன் கதாநாயகியாக நடிக்கும் படம் தான் காதலிக்க நேரமில்லை.ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவர உள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்ப்பை பெற்றுவந்த நிலையில் படக்குழுவினர் இதன் டீசரையும் இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி போன்றோர் நடித்துள்ளனர்.இதில் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியான நிலையில் இதன் பாடல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் டீசரை பார்த்த ரசிகர்கள் ரொமேன்டிக் புயெல்க்கே காதலிக்க நேரமில்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed