பள்ளி விழாவில் சாமி வந்தது போல் தத்ரூபமாக ஆடிய மாணவன்… என்ன ஒரு ஆக்ரோஷமாக ஆட்டம் பாருங்க..!

karuppan-song-dance-school-boy-compatition

மாணவர்களின் திறனை அறிந்து அவர்களின் திறமையை மெருகேற்றி தனித்துவத்தோடு சிறந்து விளங்க பள்ளி கல்வி துறை சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை சார்ந்த திறனை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் கலைகள் சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் தங்களின் தனி திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

வெற்றி பெரும் மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்வதற்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது. பங்கு பெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி துறை அதிகார பூர்வ வலைத்தளத்தில் அந்த பதிவுகளை பதிவிட்டு மாணவர்களை ஊக்கபடுத்தி வருகிறார்கள். சமீபத்தில் மாணவி ஒருவர் தேனிசை குரலில் பாடிய பாடல்களும், ட்ரென்டிக்கான பாட்டிற்கு ஆடிய நடன காட்சிகளும் வலைத்தளத்தில் வைரல் ஆனது.

பள்ளி கல்வி துறை சார்பில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் இந்த பதிவுகள் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது. கடைக்கோடியில் வாழும் மாணவர்களின் திறனையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைகிறது.

இங்கு ஒரு மாணவர் கருப்ப சாமி பாடலான அங்கே இடி முழங்குது……பாடலுக்கு சாமி வந்தது போல் ஆடிய மாணவரின் பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……

You may have missed