லட்டு பற்றி பேசிய நடிகர் கார்த்தி… கண்டனம் தெரிவித்த பவன் கல்யாண்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் தொடர்ந்து நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவர் தற்பொழுது மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் படம் இந்த வரம் திரைக்கு வர இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார் நடிகர் அரவிந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன்க்காக நடிகர் கார்த்தி ஆந்திரா சென்றிருந்தார். அப்போது அங்கு அவரிடம் அவர் நடித்து மிகவும் பிரபலமான சிறுத்தை படத்தின் டயலாக் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்று கேட்டனர். அதற்க்கு அவர் லட்டுலாம் இப்போது சென்சிட்டிவ் டாப்பிக் ஆகிவிட்டது அதை பற்றிலாம் பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறிய இந்த செய்தி ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் காதுக்கு சென்றதும் அவர் நடிகர் கார்த்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதற்க்கு கார்த்தி ரசிகர்கள் கார்த்தி எதும் தப்பா பேசவில்லையே சென்சிடிவ் ஆன விசியம் என்று தான கூறியிருக்கிறார். இதற்கு எதுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி அவரது X பக்கத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்..வீடியோ இணைப்பு கீழே…

Laddu issue!pic.twitter.com/DnyScjJewR
— Mr Monk (@itsmytweeti) September 24, 2024