ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு நிவாரண தொகையை உதயநிதி ஷ்டாலினிடம் வழங்கிய நடிகர் கார்த்தி…
சில வாரங்களாகவே தொடர்ந்து சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பொழிந்து கொண்டு வருகிறது. இதன் பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். காணாமலையை தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் உருவாக்கி மக்களை நிலைகுலைத்து கொண்டிருந்தது. விவசாய நிலங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள். இந்நிலையில் கனமழையால் பாதித்த மக்களுக்கும், ஃபெஞ்சல் புயலால் அவதிப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அவர்கள் நிவாரண உதவிகளை செய்திருந்தார். அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் 10 லட்ச ரூபாயை நிவாரண தொகையாக துணை முதலவர் உதயநிதி ஷ்டாலினை நேரில் சந்தித்து வழங்கிருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் வாடா மாவட்டங்களில் புயலால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயத்திற்கு உதவும் கால்நடைகள், பயிர்கள் , மோட்டார்கள் என எக்கச்சக்கமான பாத்திப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் துணை முதல்வர் உதயநிதி ஷ்டாலினை சந்தித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுமாறு 15 லட்ச ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.