கர்மா பேசும்..!! வைரலாகிய நயன்தாராவின் இன்ஸ்ட்டா ஸ்டோரி…

லேடி சூப்பர் ஸ்டாராக திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்கினேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு உயிர், உலக் என இரு மகன்களும் உள்ளனர். நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலமாக தான் விக்கினேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இப்படத்தை இயக்கியது விக்கினேஷ் சிவன் தான். இதை தயாரித்தது நயன்தாராவின் நெருங்கிய நண்பர் தனுஷ் தான். ஆனால் சில வாரங்களாகவே நயன்தாரா மற்றும் தனுஷிற்கு இடையில் பிரச்சனையாகவே போய்க்கொண்டிருக்கிறது. நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் க்லிப்ஸை இணைப்பதற்கு தனுஷ் சம்மதம் வழங்காததால் இவர்களின் பிரச்சனை நீடித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

ஆனால் அந்த க்ளிப்ஸ் ஆவணப்படத்தில் வந்திருந்ததால் நயன்தாரா மற்றும்விகினேஷ் சிவன் இருவர் மீதும் 10 கோடி கேட்டு வழக்கு தொடுத்திருந்தார் நடிகர் தனுஷ். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா வீடியோ வெளிட்டு பதிவும் வெளியீட்டுருந்தார். ஆனால் அதற்க்கு தனுஷ் அமைதியாகவே இருந்து விட்டார். இந்நிலையில் இன்று நயன்தாரா தந்து இன்ஸ்ட்டா ஸ்டோரியில் “கர்மா சொல்கிறது!! பொய்யால் ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழிக்கும்போது அதை கடனாகப் பெறுங்கள், அது உங்களுக்கு வட்டியுடன் திரும்பி வரும்”என்று பதிவிட்டுள்ளார். தற்போது நயன்தாரா அவர்களின் ஸ்டோரி தான் வைரல் ஆகி வருகிறது.
