கங்குவா படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் போட்ட திடிர் வேண்டுகோள்…

தெலுங்கில் படங்களை இயக்கி கொண்டிருந்த சிவா அவர்கள் சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து தமிழில் படங்களை எடுக்க ஆரம்பித்தார். அந்தவகையில் வெளிவந்ததுதான் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்,அண்ணாத்த போன்ற படங்கள். இதை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் இரு தினம் வெளிவந்திருக்க படம் தான் கங்குவா.

மக்களின் பலத்த எதிர்பார்ப்பின் பிறகு வெளிவந்த இப்படம் முதல் நாளிலே 45 கோடி முதல் 50 கோடி வரை வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது. எந்த அளவு வசூல் இருந்ததோ அந்த அளவு இப்படத்திற்கு எதிர்மறை விமர்சனகளும் இருந்து வந்தது. பல பேர் இப்படத்தை பார்த்து விட்டு காது வலிக்கிறது ரொம்ப சத்தம் எனலாம் கூறி இருந்தனர்.

இதை யோசித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் தேயட்டர் உரிமையாளர்களுக்கு volume இரண்டு புள்ளிகள் குறைத்து வைக்க சொல்லி கூறி இருக்கிறாராம். இதனால் இனிமேல் எதிர் விமர்சனங்கள் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.
