எத்தனை மணிக்கு வந்துருக்கீங்க என ஆத்திரத்துடன் சூர்யாவிடம் கேட்ட நபர்… மும்பையில் கங்குவா பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்..!!

இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் கங்குவா படத்திற்கான இறுதிக்கட்ட ப்ரோமோஷன் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. அதில் சூர்யா பங்கேற்க வரும் வேளையில் பிரெஸ் மீட்டிற்கு வந்த ஒரு நபர் சூர்யாவிடம் மிக ஆத்திரமாக ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

அவரை மிக சாந்தமாக சமாதானப்படுத்தும் வகையில் சூர்யா பேசிவிட்டு செல்ல முயலும்போதும் அந்த நபர் சூர்யாவை பிடித்து வைத்து மறுபடியும் வாட்சை காட்டி கத்துகிறார். இதை அங்கிருந்து பார்த்த பலரும் தடுக்க வருகையிலும் சூர்யா மிக பொறுமையுடன் பேசி கொண்டு செல்கிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக இதுவே பாலிவுட் ஹீரோவாக இருந்தா இப்படி அவர் கேட்டிருப்பாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed