சும்மா தெறிக்கவிடும்… ராகவா லாரன்ஸ் நடிக்கும் கால பைரவாவின் முதல் போஸ்டர் ரிலீஸ்…

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகராக வந்து அதைத்தொடர்ந்து இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி மற்றும் நடித்த காஞ்சனா படம் நான்கு பாகங்கள் வந்தது.நான்குமே வெற்றியும் கொடுத்தது.

இவர் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நல்ல உதவிகளையும் செய்து வருகிறார்.இவர் மாற்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.இன்று அவரின் பிறந்தநாளே முன்னிட்டு அவரின் புது பட போஸ்ட்டரை வெளியீட்டுளார்கள்.

இவரின் 25 ஆவது படமான கால பைரவா போஸ்டர் தான் ரிலீஸ் ஆகியுள்ளது.இப்படத்தை தெலுங்கு இயக்குனரான ரமேஷ் வர்மா இயக்குகிறார்.இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்ததோடு ராகவா லாரன்ஸ்க்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
