காதல் சந்தியாவிற்கு இவுளோ பெரிய மகளா.? வெளியான சந்தியாவின் குடும்ப படம்…!

காதல் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படம் தான். நடிகர் பரத் மற்றும் சந்தியா இருவருக்கும் முதல் படம் தான் காதல். முதல் படத்திலேயே இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. மேலும் காதல் படத்தில் நடிகை சந்தியா தன்னுடைய நடிப்பை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்திருப்பார். மேலும் இந்த படத்தின் மூலம் இவருடைய புகழ் உச்சத்துக்கு சென்றது. அனைவரும் இவரை காதல் சந்தியா என்று தான் அழைத்தனர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் காதல் சந்தியா.

இவர் காதல் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்தார். ஆனால் காதல் படம் அளவுக்கு எந்த படமும் இவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன் பின்னர் இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து கொண்டிருந்த சந்தியா 2015ம் ஆண்டு சென்னையில் கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்து கொண்டிருந்த சந்திரசேகர் என்பவரை குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய திருமணத்திற்கு பிறகு இவரை சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி பார்ப்பது அரிதான ஒன்றாக ஆகிவிட்டது. 2015 டிசம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் 2016 ம் ஆண்டு சென்னையில் வைத்து திருமண வரவேற்பினை நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் சென்னையில் வெள்ளம் வந்ததால் வரவேற்புக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இவர் தற்போது சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக தான் இருக்கிறார். அவர் சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தன்னுடைய குடும்ப படத்தினை வெளியிட்டுருக்கிறார். அது இப்பொது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவருடைய ரசிகர்கள் அவரின் புகை படத்தை பார்த்து காதல் படத்தில் இருந்த அதே அழகு இப்பொதும் இருக்கிறது. நீங்கள் மீண்டும் சினிமாவிற்கு வரலாம் என பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
