வாழு..!! வாழ விடு..!! கடவுளே அஜித்தே என்னும் கரகோஷத்தை நிறுத்துமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்ட தல அஜித்…
விஜய் அவர்கள் நடத்திய TVK மாநாட்டின் பின் எந்த பொது நிகழ்ச்சிகளில் பார்த்தாலும் தல அஜித் அவர்களின் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்னும் கோஷத்தே எழுப்பி வருகின்றனர். இது கேட்பதற்கு மிகவும் அசௌகரியமாக தான் இருக்கும். அனைத்து பொது இடங்களிலும் இப்படி கத்துவது மக்களை தொந்தரவு செய்வதாகவே இருந்தது.
இதனை அறிந்த நடிகர் அஜித் அவர்கள் ரசிகர்களுக்காக ஒரு கோரிக்கையை வெளியீட்டுருந்தார்கள். அதில் அவர் கூறியதாவது, அண்மைகாலமாகவே முக்கிய நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘கடவுளே அஜித்தே’ என்று இந்த கோஷம் என்னை கவலையடைய செய்து வருகிறது. என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிறுத்துங்கள். இச்செயலை திருத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும், யாரையும் கஷ்டப்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் மேலும் சட்டங்களை மதியுங்கள் என்றும் கேட்டுள்ளார் நடிகர் அஜித்.