காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்தவரா இது? இப்போ அம்மணி எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாக போராடி வந்தார் விக்ரம். பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தது. அதிலிருந்து அவரும் சீயான் விக்ரம் ஆனார். இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம்.

நடிகர் விக்ரம் சினிமாவுக்காக தன் உடலை எந்த அளவிலும் வருத்திக் கொள்பவர். அந்தவகையில் கண் தெரியாதவராக விக்ரம் நடித்த காசி திரைப்படத்தில் பார்வையாளர்களைக் கலங்க வைத்திருப்பார். காசி படத்தில் விக்ரமுடன் காவ்யா மாதவன் நடித்திருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் கமலின் பல படங்களிலும் காவ்யா மாதவன் நடித்திருந்தார். அவ மெகா ஹிட்டும் ஆகியது.

தமிழில் பெரிதாக சோபிக்க முடியாவிட்டாலும் கேரளத்தில் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் நடிகர் திலீப்பின் மனைவி ஆவார். நடிகை மஞ்சு வாரியரை டைவர்ஸ் செய்த, திலீப் அதன் பின் காவ்யா மாதவனை திருமணம் செய்தார்.
pic1

pic2
