ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து உண்மை என்ன தெரியுமா…? பதில் அளித்த ஆர்த்தி……

தற்பொழுது, இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் சம்பவத்தில் ஒன்று தான் ஆர்த்தி, ஜெயம் ரவி விவாகரத்து. இதை பற்றி பலரும் பல விமர்சனம் செய்கின்றனர்.
ஜெயம் ரவி அவர்கள் தான் விவாகரத்து கோரி நீதி மன்றத்த்தில் ஆர்த்தி மீது வழக்கு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்தது ஆர்த்தி வெளியிட்ட பதிவில் விவகாரத்து பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவர் இதன் முன் என்னிடம் இதை பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.

இதனிடையில் ஆர்த்தி ஜெயம் ரவி விவகாரத்திற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்திருந்தனர் . இந்த பேச்சை நிறுத்தும் வகையில் ஜெயம் ரவி அவர்கள், பத்திரிகையாளர்களிடம் என்னை ஒரு பாடகியுடன் இணைத்து பேசுகிறார்கள் தயவு செய்து யாரும் அப்படி பேச வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.
மேலும் நானும் கெனிஷாவும் “ஹீலிங் மையம்” ஒன்று தொடங்க உள்ளோம். அதை யாரும் கெடுக்காதீர்கள் எனவும் அதை கெடுக்க முடியாது எனவும் கூறி இருந்தார்.
இதனையடுத்து பயில்வான் ரங்கநாதனுடனான பேட்டியில் ஆர்த்தி பற்றி என் மகன்களுக்கு தெரியாது. அவர் எப்போதும் அவர்களுக்கு அம்மாதான். மேலும் என் மாமியார் தான் கொடுமைக்காரர் எனவும் கூறியுள்ளார். இப்படி தினம் தினம் ஆர்த்தி ஜெயம் ரவி விவகாரம் பரவும் நிலையில் ஆர்த்தி எந்த ஒரு பதிவும் போடாமலே இருந்தார்.

இதனால் பலரும் ஆர்த்தி பற்றி தான் விமர்சித்து பேசிக்கொண்டிருந்தனர். இதனிடையில் ஆர்த்தி தன் தரப்பு வாதத்தை தெரிவித்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அவர் நான் அமைதியாக இருப்பதால் எனக்கு குற்ற உணர்ச்சியோ என் மீது தவறோ இல்லை என்று தெரிவித்தார். உண்மை என்னவென்று தெரியாமல் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் கூற தேவை இல்லை எனவும், நான் சட்டத்தை நம்புகிறேன் எனக்கு நீதி கிடைக்கும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.
இதன் முன் நான் வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு விவகாரத்தில் ஒப்புதல் இல்லை என்று தான் கூறினேனே தவிர எனக்கு விவாகரத்து பற்றி ஏதும் தெரியாது என கூறவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என விளக்கம் கொடுத்துள்ளார்.
