இயற்கை படத்தின் கதாநாயகி குட்டி ராதிகா… தற்போது முன்னாள் முதல்வரின் மனைவி… எப்படி இருக்கிறார் பாருங்கள்..!!

இயற்கை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் குட்டி ராதிகா.இவர் ஒரு கன்னட நடிகை.இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி ஆவார். தன்னைவிட 27 வயது அதிகமான குமாரசாமி அவர்களை ராதிகா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ராதிகாவின் முதல் திருமணம் 2000த்தில் நடந்த நிலையில் அவரின் கணவர் 2002ஆம் ஆண்டு உயிரிழந்தார்.குமாரசாமிக்கு 1986ல் முதல் திருமணம் நடந்தது.வீட்டின் எதிர்ப்பை மேற்கொண்டு ராதிகா அவர்கள் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார்.தனது 14 வயதில் நீல மேக சியாமா என்கிற கன்னட படத்தில் அறிமுகமானார் ராதிகா.

2003 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் தமிழில் நடிக்க வந்தார் ராதிகா .மொத்தமாக 30 படங்களில் நடித்துள்ள ராதிகா அவர்கள் முதல்வர் குமாரசாமியை மணந்த பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார்.124 கோடிக்கு எஜமானியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராதிகா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பைரவாதேவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வர உள்ளார்.இப்படம் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி வெளிவந்தது.
