அப்பா இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன்… படத்தின் தலைப்பு இதுதான் கூறிய அர்ஜுன்…

கன்னட மற்றும் தமிழ் சினிமாத்துறையில் ஒரு முக்கிய நட்சத்திரமாக 90s காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருப்பவர் தான் நடிகர் அர்ஜுன்.இவர் நடிகராக மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கி இயக்குனராகவும் வலம் வருகிறார்.

இடையில் அவரது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளிவந்தது.அப்பட ஹீரோவிற்கு அர்ஜூனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் தொடங்காமல் போய்விட்டது.இப்பொது அதே படத்தை நிரஞ்சன் என்பவரை கதாநாயகனாக்கி தொடங்கி நடத்தி கொண்டிருக்கிறார்.

இப்பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சத்தியராஜ் அவர்கள் கதாநாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுருக்கிறாராம்.தனது மகள் நடிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் சீதா பயணம் என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.