சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று நடக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷின் திருமணம்… அதிரடியாக வெளியாகியது திருமண பத்திரிகை…

பைலட்ஸ் என்கிற படத்தின் மூலமாக குழந்தை நச்சத்திரமாக 2000-தில் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இதைத்தொடர்ந்து சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2015ல் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர். இதைத்தொடர்ந்து இவர் நடித்த ரஜினி முருகன் படம் மிகுந்த வெற்றியை கொடுத்தது.இப்படத்தின் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ரெமோ என்கிற படத்தில் இணைந்தார். பின்னர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் படத்திலும் நடித்து வெற்றியை கொடுத்தார். இதைத்தொடர்ந்து பல முக்கிய பிரபலங்களுடன் நடித்து மிக முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் வருகிற டிசம்பர்-12 ல் இவருக்கு கோவாவில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

மாப்பிளை இவருடன் 15 வருடங்களாக நண்பராக இருக்கும் ஆண்டனி தட்டில் என்பவர். இருவருக்கும் கேரளா சொந்த ஊராக இருப்பினும் இருவருமே துபாயில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவரின் திருமண பாத்திரிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இவரின் திருமணம் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளன்று நடக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஐவரும் சரி இவரின் அம்மா மேனகா சுரேஷ் சரி இருவருமே ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்துள்ளார்கள்.

You may have missed