I am sorry Iyeppaa என்ற பாடலை பாடிய இசைவாணிக்கு துணையாக நிற்கும் நீலம் பண்பாட்டு மையம்… கொந்தளிக்கும் ஐயப்ப பக்தர்கள்…

கானா பாடல் பாடுவதன் மூலம் திரையினுள் வந்தவர் தான் இசைவாணி.ஆனால் இவர் மிகவும் பிரபலம் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தான். இவர் பல கானா பாடல்களை பாடியுள்ளார்.குறிப்பாக இவரின் ‘பெரிய கறி’ என்னும் கானா பாடல் மாக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றது எனலாம்.

தற்போது இவர் பா.ரஞ்சித் அவர்கள் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அதில் அவர் இந்து மத கடவுளை மிகவும் தரக்குறைவாக இழிவு படுத்தி ஒரு பாடலை பாடியுள்ளார்.இது பயங்கரமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி இவர் மீது ஐயப்ப பக்தர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை இவரை கைது செய்யுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. குறிப்பாக 2020-ல் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகில் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்து பெருமைப்படுத்தியது இவரை.

இவர் தொடர்ந்து இந்து மதத்தை தாழ்த்தியும் கிறிஸ்த்தவ மதத்தை உயிர்த்தியும் பாடலை பாடி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் இது ஒரு மத சார்பான பாடலை இல்லை. இது பெண்களின் உரிமையை குறிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல் தான் எனவும் ,என்ன நடந்தாலும் எங்கள் நீலம் பண்பாட்டு மையம் எப்பொழுதுமே இசைவாணிக்கு துணையாக தான் நிற்ப்போம் என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
