கோலாகலமாக நடந்த ரோபோசங்கர் மகள் இந்திராஜாவின் வளைகாப்பு… எங்கள் வம்சத்தை வளர்க்க வந்த தேவதை… கண்கலங்கிய இந்திரஜா மாமியார்…
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து காமெடி செய்து பின் விஜய் டீவியில் வந்து ரோபோ கெட்டப்லாம் போட்டு தனக்கென தனி பெயரையெடுத்தவர் தான் ரோபோசங்கர்.இவர் மாறி படத்தின் மூலமாக வே மக்களிடையே பிரபலமானார். இவரின் நகைச்சுவை திறமை மற்றும் நடிப்பு மிக தனித்துவமாக இருக்க கூடியது. மாறி படத்தை தொடர்ந்து இவருக்கு திரையுலகில் பல படங்களின் வாய்ப்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இவரின் மகளையும் திரை உலகிற்கு பிகில் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் இவரின் மகள் இந்திரஜா. இதைத்தொடர்ந்து இவர் விருமான படத்திலும் கதாநாயகியின் நெருங்கிய தோழியாக நடித்திருப்பார். இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ரோபோசங்கரின் மகள் இந்திராஜாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இந்திரஜா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் தற்போது இந்திராஜாவிற்கு தடபுடலாக வளைகாப்பும் நடந்து முடிந்தது. அதில் அவர்கள் குடும்பத்துடன் போட்டோசூட் எடுத்து இன்ஸ்ட்டாவில் பகிர்ந்திருந்தார்கள். இதில் இந்திராஜாவின் மாமியார் பேசிய நிலையில் அவர் கூறியதாவது, 28 வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டிற்கு அவரும் முதல் வாரிசு மற்றும் இந்திரஜா எங்கள் வீட்டு தேவதை என்று கண்கலங்கி கூறியுள்ளார்.
pic1
pic2
pic3
pic4