தீபாவளி கொண்டாட்டத்தில் மனைவியுடன் ஹரிஷ் கல்யாண்… வைரலாகும் அழகான போட்டோஸ்…

சிந்து சமவெளி படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ஹரிஷ் கல்யாண்.இவரின் படங்கள் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.அந்த நேரம் தான் இவரை பிக் பாஸ் அழைத்தது.

பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.அந்த நிகழ்ச்சியை பாத்தவர்களில் இவரை பிடிக்காதவரே இல்லை எனலாம்.இதைத்தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் படமும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் நடித்து மிக பெரிய வெற்றியை பெற்றார்.பின் இவர் முன்னணி நாயகர்களில் ஒருவராக வந்து தொடர்ந்து அனைத்து படங்களிலும் வெற்றியை கொடுத்ர்த்தார்.

தற்போது இவர் தீபாவளியை அவரின் மனைவியுடன் கொண்டாடியுள்ளார். இப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தீபாவளி வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.