கடவுள் கனவில் வருகிறாரா..!! கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..??

ஒரு நபர் தூங்கும்போது கனவு வருவது என்பது மிக சாதாரணமான விஷயம் தான் . ஆனால் சில கனவுகள் நம்மை மிரட்டும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த கனவிற்கெல்லாம் அர்த்தம் உள்ளது என்று கனவு சாஸ்த்திரம் சொல்லுகிறது.அதில் கனவில் கடவுள் வந்தால் இதெல்லாம் நடக்கும் என சொல்லப்படுகிறது.

கனவில் தெய்வங்கள் வந்தால் நமக்கு தெய்வீக சக்தி கிட்டுமாம். நம்மிடம் தெய்வம் எதையாவது சொல்ல முயற்சிக்கின்றது என்பது போல் ஆகுமாம்.ஜோதிடத்தின்படி எதிர்காலத்தை பற்றி கடவுள் நிமிடம் கூற வருவதாக சொல்கிறார்கள். இந்த மாதிரியான கனவுகள் சிறப்பு அர்த்தத்தை கொண்டுள்ளதாம்.

தெய்வம் கனவில் வருவது நாம் ஆன்மீக ஆதரவை தேடுவது போன்றதாம். நாம் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து நிற்கும் போது வழிகாட்டுவது போன்று தெய்வம் கனவில் வருமாம்.சில மர்மமான கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக கடவுள் கனவில் தோன்றுவாராம்.

மிகவும் கடினமான காலங்களில் கடவுள் கனவில் வந்தால் நமக்கு கட்டாயம் வழிகாட்டுவார் என்று அர்த்தமாம். கடவுள் அடிக்கடி கனவில் வருவது நம்மை மிக மதிப்புமிக்க மனிதராக குடும்பங்கள் முன்னிலையில் நிறுத்துமாம். நம்மை வலுவாக்கவும் கடவுள் கனவில் வருவாராம் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.