பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு குரல் கொடுக்குமாறு சூர்யா குடும்பம் வெளியிட்ட பதிவு…

கோலிவுட்டில் மிக பிரபலமாக இருப்பவர்கள் தான் ஒரே குடும்பத்தை சேர்ந்த சூர்யா,ஜோதிகா மற்றும் கார்த்தி. இவர்கள் சர்வதேச பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இது குறித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். இப்பதிவில் சூர்யாக்குடும்பம் கூறியதாவது, எப்போதுமே பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளை எதிர்த்து நிற்க சபதமேற்கிறேன். என் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு உரிய மரியாதையும் ஆதரவும் அளிப்பேன்‌ என்று உறுதியளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்கள்.

மேலும், வாருங்கள் அனைவருமே ஒன்றிணைந்து பாதுகாப்பாக மற்றும் மதிப்பு மிக்கவராக உணரும் ஒர் உலகை உருவாக்குவோம் எனவும் பதிவிட்டுள்ளனர். மேலும் இத்தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களும் உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விகுறியாகவே உள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் நாள்தோறும் தொடர்வது மிகவும் துயரம் அளிக்கும் செயலாகவே உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கென்றே தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்ததை தொடர்ந்து கண்டிப்பாக உடனடியாக தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும்.அதன் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.மேலும் பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed