ஜப்பானில் ப்ரண்ட்ஸ் மீனா மற்றும் குஷ்புடன் சுற்றி திரியும் ராதிகா சரத்குமார்… வைரலாகிய போட்டோஸ்…

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இருந்தவர் தான் ராதிகா.கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூல தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால் பதித்தார்.பின் அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, சரத்குமார், சத்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் நடித்து விட்டார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக ஒருகாலத்தில் வலம் வந்தவர்.இவரின் நடிப்பிற்கும் சிரிப்பிற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.இன்றைய காலத்தில் இவர் குணச்சித்திர நடிகையாக கலக்கி கொண்டுள்ளார். சினிமா மட்டுமின்றி தனது குடும்பங்களுடனும் இவர் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

இவர் அடிக்கடி அவர் மக்கள் வீட்டிற்கு சென்று பேர குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடுகிறார் .இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சரத்குமாரின் மகள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.தற்போது நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்காக ஜப்பான் சென்ற இவர் தனது சக தோழிகளான மீனா மற்றும் குஷ்புடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
