அப்பாவுக்கு செல்ல அம்மாவாக மாறிய குட்டி மகள்.. மனதுக்கு இதமான காணொளி..!

food-feel-magal-cute-video

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அதுவரை கம்பீரமாகவே குடும்பத்தினர் மத்தியில் வலம் வந்த அப்பா, மகளின் பிரிவு தாங்காமல் அழும் காட்சியையும் நாம் பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தை அவரது தந்தையின் மீது மிகவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

தன் அப்பா, அந்த குட்டிக்குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு பங்சன் வீட்டிற்குச் சென்றார். அங்கே அந்தக் குட்டிக்குழந்தைக்கு அவரது அப்பா ஊட்டிவிட்டார். பதிலுக்கு அந்தக் குட்டிக்குழந்தையும் தன் அப்பாவுக்கு தன் பிஞ்சுக் கைகளால் சோற்றை எடுத்து ஊட்டிவிட்டது. அந்த ஒரு நொடிப்பொழுதில் அந்தக் குழந்தை தன் அப்பாவுக்கே, அம்மாவாகிப் போனது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். உருகிப் போவீர்கள்!

You may have missed