நான் அடிச்சா தாங்கமாட்டடா……. தாவி தாவி அடித்து வெளுத்துக்கட்டும் கேபிரியல்லா…..

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் கேபிரியலா.இவர் முதலில் ஜோடி நம்பர் 1 என்ற ரியாலிட்டி ஷோ மூலமாவே சின்னத்திரைக்குள் வந்தார்.பின் 3 படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்தார்.

இருப்பினும் இவருக்கு வெற்றி கொடுத்ததது பிக் பாஸ் என்றே சொல்லலாம் .இதை தொடர்ந்தே இவருக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.முதலில் இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி நிறைவுபெற்ற ஈரமான ரோஜா-வின் அடுத்த பக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.இதில் இவரின் நடிப்பை பாராட்டாத ஆளே இல்லை எனலாம். எதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றவர்.

ஈரமான ரோஜா 2 முடிந்த நிலையில் கொஞ்சம் கூட பிரேக் விடாமல் சன் டிவி சென்று அங்கு மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து தூள் கிளப்பி வருகிறார்.இந்த தொடரில் இவர் சண்டை காட்சிகளிலும் வருகிறார்.எனவே அதற்காக தன்னை தயார்படுத்தும்போது எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த மக்கள் கேபி முயற்சியை பாராட்டியபடி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed