நல்லா நிம்மதியா தூங்குங்க… இந்தந்த கனவுகள் வந்தால் அதிர்ஷ்டசாலியாம்…

ஒரு நபர் தூங்கும்போது கனவு வருவது என்பது மிக சாதாரணமான விஷயம் தான் . ஆனால் சில கனவுகள் நம்மை மிரட்டும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த கனவிற்கெல்லாம் அர்த்தம் உள்ளது என்று கனவு சாஸ்த்திரம் சொல்லுகிறது.அதில் இந்த 5 விதமான கனவு கண்டால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்று சொல்கிறார்கள்.

அதில் முதலாவதாக தூங்கும்போது கனவில் தண்ணீர் வந்தாலோ இல்லை நீச்சல் அடிப்பது போல் கனவு வந்தாலோ மங்களகரமானதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட கனவு வெற்றியின் அடையாளமாக சொல்கிறார்கள்.கனவில் மலை வந்தால் பணம் வந்து கொட்டுமாம்.

அதேபோல் கனவில் நீங்கள் மாம்பழத்தை கண்டால் நீங்கள் இறக்கும் பிரச்சனையில் இருந்து மீண்டு வரப்போவதாக அர்த்தமாம்.மாம்பழம் கனவில் வருவது வாழ்வின் முன்னேற்றத்தை குறிக்குமாம்.இப்படிப்பட்ட கனவு வந்தால் நல்லது நடப்பதற்காக கனவை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமாம்.

கனவு சாஸ்திரத்தின் படி நீங்கள் மத சம்பந்தமாக பயணம் செய்வது போல் இருந்தால் உங்களுடன் தெய்வம் இருப்பதை குறிக்கிறதாம். மிகவும் மங்களகரமான விஷயம் நடப்பதையும் குறிக்குமாம். வாழ்க்கையில் நல்லது தொடர்ந்து நடக்குமாம்

கனவில் தாமரைமலர் வருவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்வில் இருந்த நீங்கா பிரச்சனை நீங்கி நல்வழி பிறக்குமாம். எதிர்பார்த்த அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்குமாம்.

கனவில் புழங்குல வந்தால் வலுவான நிதி பலத்தை குறிக்குமாம். இது ஒரு மங்கள் அறிகுறி போன்றதாம். வாழ்வில் இன்பம் அதிகரிக்குமாம். தவறான புரிதல்கள் மாறி நல்ஒற்றுமை மலருமாம்.