உணவு விரும்பிகளே உஷார்..!! உயிருக்கு ஆபத்தை தருகிறது செய்தித்தாளில் சுற்றப்பட்ட உணவு…

சில உணவு வகைகள் பார்ப்பதற்கே மிக அழகாக சாப்பிட தூண்டு வகையில் தான் ரோட்டு கடையில் இருக்கும். அதுவும் முக்கியமாக எண்ணையில் பொரித்த உணவு தான் பார்த்த உடனே எந்த இடமென பார்க்காமல் திங்க தோன்றும்.ஆனால் அந்த வகையான உணவில் உயிரை பறிக்கும் அளவில் விஷம் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ரோட்டுக்கடையில் விற்கப்படும் அனைத்து விதமான உணவுகளும் அவசரத்திற்கு பேப்பரில் மடக்கி தான் தரப்படுகிறது. ஆனால் பிரச்சனை இங்கு தான் உள்ளது. பேப்பரில் உள்ள எழுத்துக்களில் பயன்படுத்தப்படும் மை நம் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் எதிரானது. முதலில் இந்த வகையான மை உணவை மாசுபடுத்தும். பின் நம் ஆரோக்கியத்தை கொல்லும்.

காகிதத்தில் பயன்படுத்தும் மையில் ஐசோப்ரோபைல் பித்தலேட், டீன் ஐசோப்ரோபைலேட் போன்ற பல ரசாயன பொருட்கள் கலந்துள்ளன. அதில் சூடான உணவை கொண்டு வைக்கும்பொழுது செரிமான பிரச்சனைகள் மேலும் புற்றுநோய் வர கூட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஐசோபிரைல் ஆல்கஹால், பாலிஎதிலீன் கிளைகோல், டைதிலீன் கிளைகோல் இந்த வகையான அனைத்து ராசயனங்களுமே
செய்தித்தாளில் சேர்க்கப்படுகிறது. இதை நாம் அடிக்கடி உட்கொள்வதால் தைராய்டு, இன்சுலின், ஈஸ்ட்ரோஜன் போன்று பல ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

You may have missed