முதல் படமே சூப்பர்ஹிட்…. ஜாக்பாட் அடித்தது…. ஒரேடியாக உயர்ந்த இயக்குனர் தமிழரசன் சம்பளம்….!

0

சமீபத்தில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்துள்ளது.இந்த படம் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மைய படுத்தி எடுக்கப்பட்ட படம்.அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அட்டகத்தி தினேஷ் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரையுலகினரும் லப்பர் பந்து திரைப்பட குழுவினரை பெருமளவில் பாராட்டி வந்தனர் .

இந்த படம் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலகளவில் பெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த படம் வசூலில் உலக அளவில் ரூபாய் 35 கோடிக்கு வசூல் செய்துள்ளது இந்த படம் ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவருடைய முதல் வெற்றி படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாகவும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன அதற்க்கு அவர் வாங்க இருக்கும் சம்பளம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது தன்னுடைய அடுத்த படத்தை டான் பிக்ஸர்ஸ்க்கே இயக்க போறதாகவும் இதற்க்கு ரூபாய் 1 கோடி சம்பளம் பேசப்பட்டு பின்பு ஏஜி எஸ் போன்ற பெரிய நிறுவனம் தமிழரசன் பச்சமுத்துவை அணுகி ரூபாய் 3 கோடி தருகிறோம் எங்களுக்கு படம் பண்ணுங்கள் என்று கூற அதனை அறிந்த டான் பிக்ஸர்ஸ் நீங்கள் எங்களுக்கு தான் பண்ண வேண்டும் உங்களுக்கு நாங்கள் ரூபாய் 3 கோடி தருகிறோம் என்று கூறி தமிழரசன் பச்சைமுத்துவை கமிட் செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed