இயக்குனர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா..? இணையத்தில் வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்..!


கதாசிரியர்,இயக்குனர், நடிகர் என திரையுலகில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்போது தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் பிறந்தது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். இவர் 2003-ல் உன்னை சரண் அடைந்தேன் திரைப்படத்தில் கதை,வசனம் எழுதியுள்ளார்.அந்த படத்தில் பணியாற்றியதற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 2004ல் கேப்டன் விஜயகாந்தின் நெறஞ்சமனசு படத்தில் பணியாற்றியுள்ளார்.

நாடோடிகள் படம் 2009-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமாகும். இந்த திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விஜய் விருது, தமிழ் பிலிம்பேர் விருது, சிறந்த கதை, திரைக்கதை, எழுத்தாளருக்கான விருது கிடைத்தது.தெலுங்கில் சம்போ சிவ சம்போ படத்தை நாடோடிகள் கதை மூலம் எடுத்துள்ளார். அதன் பிறகு போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கதாநாயர்களின் படங்களில் ஓய்வின்றி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, விசாரணை, ரஜினிமுருகன், அம்மா கணக்கு, சாட்டை, பருத்தி வீரன், சுப்பிரமணிய புறம்,ஈசன் போன்ற படங்களிலும், சூப்பர் ஸ்டாருடன் கபாலி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த RRR படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலையின் துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

சமுத்திர கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன் நடிகர்,எழுத்தாளர்,இயக்குனர் என தன் திறமையை ஆரிய திசைகள் என்ற குறும்படத்தில் நிரூபித்துள்ளார். நாற்பது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தினை அவரே எடிட் செய்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய மகனுடைய புகைப்டத்தை இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரை போலவே அச்சு அசலாக இருக்கும் மகனின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது….
pic1 :

pic2

pic3
