என் உண்மையான பெயர் டெல்லி கணேஷ் அல்ல… இந்த பெயரை சூட்டியது இயக்குனர் கே.பாலச்சந்தர் தான்… கசிந்த தகவல்..

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர நடிகராக கலக்கி கொண்டிருந்தவர் தான் டெல்லி கணேஷ் அவர்கள். இவர் தற்போது வயதாகிய காரணத்தினால் காலமானார். இவரை பற்றிய தகவல் ஒன்று இப்பொது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இவரின் நிஜ பெயர் டெல்லி கணேஷ் இல்லை என்று அவரே ஒரு பேட்டியில் அளித்துள்ளார்.

திருநெல்வேலியில் வளநாடு என்கிற கிராமத்தில் 1944ல் பிறந்தவர் தான் டெல்லி கணேஷ் அவர்கள். இவர் முதலில் டிவிஎஸ் தனியார் நிறுவனத்தில் தான் பணியாற்றி வந்துள்ளார்.அதைத்தொடர்ந்து தேர்வில் பாஸ் ஆகி விமானப்படையிலும் 10 வருடம் பணியாற்றியுள்ளார். அங்கு வீரர்களுக்கிடையே நாடகம் போடும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி டெல்லி கணேஷ் அவர்கள் நடித்து வந்தார்.பின் தமிழ்நாடு வந்த பிறகு பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் 1976ல் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

இவரின் பெயர் கணேஷ் தான். பட்டின பிரவேசம் படத்தின் போது இயக்குனர் கே.பாலச்சந்திரன் அவர்கள் சினிமாவிற்கு தகுந்தாற்போல் பல பெயர்களை மாற்றியுள்ளார். ஆனால் எந்த பெயரும் சூட் ஆகாததால் நீ டெல்லியில் பல நாடகங்கள் நடித்திருப்பதால் உனக்கு டெல்லி கணேஷ் பெயர் வைக்கலாம் என்று சினிமாவிற்க்காக வைத்துள்ளார். இதனை ஒரு பேட்டியில் டெல்லி கணேஷ் அவர்களை கூறியுள்ளார்.தற்போது இந்த தகவல் வெளிவந்து பரவி வருகிறது.

You may have missed