தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த தனுஷின் குபேரா வெளியீடு குறித்த ட்ரெண்டிங் தகவல்கள்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் முதன் முதலில் நடிப்பதற்கு வரும் பொழுது இவருடைய உருவத்தை வைத்து கேலி செய்தவர்கள் பலபேர் உண்டு. அதையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு இவர் சினிமாவில் வெற்றி பாதையில் செல்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனம் ஆடுவது பாடல்களை எழுதி பாடுவது படங்களை இயக்குவது தயாரிப்பது என தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளர்த்து கொண்டார். இவருக்கென்று ரசிகர்கள் பட் டாளம் அதிகளவில் உள்ளன.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளிவந்தது. அது அவருடைய 50 வது படமாகும். அதனை அவரே இயக்கினார். பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த அந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேர படம் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனா நடித்துள்ளார்.

மேலும் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி அதில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது தனுஷின் குபேர படத்தின் பட பிடிப்பு இறுதி கட்டத்தை தொடங்கிய நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வெளிவரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.