சாப்பாடு தான் முக்கியம்… சமையல் கட்டாயம் தெரிய வேண்டும்… மனைவிக்கு நெப்போலியன் மகன் தனுஷ் போட்ட கியூட் ஆன முதல் கண்டிஷன்…

பாரதிராஜாவின் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் வில்லனாக, கதாநாயகனாக, அண்ணனாக, தம்பியாக தற்போது அப்பாவாக தாத்தாவாக என பல ரூபங்களில் நடித்திருக்கிறார். இவரது மகன் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு என்னும் நோயால் அவதிப்பட்டு வருகிறார் என்பது அனைவருக்குமே தற்போது தெரியும்.

இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் தனது மகன் தனுஷிற்கு ஜப்பானில் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக குடும்பத்துடன் ஜப்பானிற்கு தனுஷால் விமானத்தில் பயணிக்க இயலாததால் கப்பலில் சென்று திருமணத்தையும் தடபுடலாக மிகவும் கோலாகலமாக நடத்தி வைத்தனர்.தற்போது திருமணமான உடனே புதுமண தம்பதிகளான தனுஷ்- அக்ஷயா இருவரும் அவர்களின் காதல் வாழ்க்கை குறித்து நடிகை சுஹாசினியிடம் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.

அதில் அவர்கள் பேசும்போது அக்க்ஷயா அவர்கள் கூறியதாவது, தனுஷ் எனக்கு ஈ-மெயில் மூலம் கடந்த மே மாதம் ப்ரொபோஸ் செய்தார். நானும் உடனே பதில் அளித்துவிட்டேன். நாங்கள் இருவருமே மாற்றி மாற்றி பேபி என்றுதான் அழைப்போம் என ஆனந்தத்துடன் கூறியுள்ளார்.மேலும் உணவு என்பது தனுஷிற்கு மிக புடிக்கும் அதனாலே அவர் எனக்கு போட்ட முதல் கண்டிஷனே நன்றாக சமைக்க வேண்டும் என்று தான் என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

You may have missed